ஒப்பந்த அடிப்படையில் வேலை நியமனம், உரிமையற்ற அடிமைகளாக நடத்தப்பட்ட தொழிலாளர்கள் குறைந்த சம்பளம், கூடுதல் வேலை! அதாவது பாதி சம்பளம்! ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உழைப்புச் சுரண்டல்…கண்ணீருக்கும் மதிப்பில்லை, கதறலுக்கும் மதிப்பில்லை. மத்திய, மாநில அரசுகள், தொழிலாளர் நல ஆணையம் அனைத்தும் மெளனம் சாதித்தன…இறுதியில் பொங்கி வெடித்தது தொழிலாளர்கள் கலவரம்! பெங்களூரு விஸ்ட்ரான் இன்போகாம் தொழிற்சாலை  கலவரம் சட்ட ஒழுங்கு பிரச்சினையல்ல, சகிக்க முடியாத மனிதாபிமானமற்ற உழைப்பு சுரண்டலுக்கு எதிரான கோபாவேசமேயன்றி, வேறல்ல! நிரந்தர தொழிலாளிகள் ஆயிரம் பேர்  பணிபுரியும்  ஒரு தொழிற்சாலையில், அதைவிட  ...