பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது என்ன? சினிமா,சீரியலுக்கும்,இதுக்கும் என்ன வேறுபாடு? இது சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது தனிமனிதர்கள் உளவியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது..போன்ற கேள்விகளுக்கு நாம் சரியான விடையை கண்டுபிடித்துவிட்டால்…இந்த சமூகமும்,தனிமனிதர்களும் பல ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்! இந்த சமூகத்தை அதன் இயல்பிலிருந்து தடம்புரள வைத்து, தாங்கள் கட்டமைக்க விரும்பும் சமூக கலாச்சாரத்தை பரப்பும் கார்ப்பரேட்களின் நோக்கங்களில் ஒன்று தான் பிக்பாஸ்! சினிமா,சீரியல் போன்றவை சில கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கி,அதில் பொருந்தி நடிக்கக் கூடிய நடிகர், நடிகர்களைக் தேர்வு செய்து உருவாக்கப்படும் ...