காடுகள், காட்டுயிர்கள், சுற்றுச் சூழல் தொடர்பாக கடந்த 30 வருடங்களாக அக்கறையுடன் இயங்கியும், இவைசார்ந்த ஒளிப்படத் துறையில் செயலாற்றியும் வருபவர் சண்முகானந்தம். இவர் தமிழகக் காடுகளில் மாதக்கணக்கில் தங்கி காட்டுயிர்களை படம் எடுத்தவர். அவரிடம் சமகால சூழலியல் பிரச்சினைகள், குறைந்து வரும் அரிய விலங்கினங்கள், அழிக்கப்பட்டு வரும் காடுகள் ஆகியவை தொடர்பாக நிகழ்த்தப்பட்ட உரையாடல்! சமீபமாக காட்டுவிலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. தற்போது டி-23 புலியை தேடும் விவகாரம் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சூழலியலாளரான நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? ஒரு காட்டுயிர் ...