ஈர நிலங்கள் என்பவை நமக்கு இயற்கை தந்த கொடையாகும். நகர விரிவாக்கங்களின் பெயரால் அவற்றை அழிய விடாமல் பாதுகாக்க உருவாக்கப்பட்டது தான் ராம்சார் அங்கீகாரமாகும்! அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 14 ராம்சார் நிலங்களில் மிக வித்தியாசமானது வடுவூர் பறவைகள் சரணாலயம்! உலகில் உள்ள ஈர நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 1971-ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் ஐ.நா. அமைப்பின் ஏற்பாட்டில் உலக நாடுகள் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு தான் ராம்சார் உடன்பாடு ஆகும்.தற்போது உலகெங்கிலும் 2,400 க்கும் மேற்பட்ட ...
மழைக் காலம் வந்தால் புயல் வருமா?, வெள்ளம் வந்து வீட்டில் மழைநீர் புகுந்துவிடுமா?, மரம் சாய்ந்துள்ளது, சுரங்கப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளது அதனால் இங்கிங்கே செல்ல வேண்டாம் என்று தொலைக்காட்சியில் பிரேக்கிங் செய்தி ஓடிக்கொண்டிருக்கும். விளிம்புநிலை மக்களுக்கு அரசு, தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே உணவு வழங்குகிறார்கள். மழைக் காலம், கோடைக் காலம், குளிர் காலம் இப்படி எந்த காலம் வந்தாலும் பேச்சு மனிதர்களைச் சுற்றியே இருக்கின்றது. ஆனால், இந்த உலகில் மனிதர்கள் கூடவே கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன!. நம் ...
உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்குப் பகலில் வேலை, இரவில் உறக்கம் என்பது பொதுவான ஒன்றாகும். இது இயற்கை படைப்பு. ஆனால் இதில் மாற்றத்தைக் கொண்டு வந்தான் மனிதன். அது இரவு வேலை என்பதே ஆகும். பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இரவு தனியாக ஒரு ஷிபிட் அமைத்து வேலை செய்யும் சூழலை உருவாக்கினார்கள். இது செயற்கையான ஒன்றாகும். உண்மையில் இரவு கண்விழித்து வேலை செய்யும் சூழல் மனித உடலுக்கு இல்லை. ஆனால் அதை வலுக்கட்டாயமாக உருவாக்கிக் கொண்டான். இங்குதான் மனிதனுக்கும் மற்ற சில உயிரினங்களுக்கும் வேறுபாடு உண்டாகிறது.. மனிதனைத் தவிர்த்து மற்ற உயிரினங்களில் 95 சதவிகிதம் பகல் செயல்பாடுகள் உடையவை. எலியை கொன்று ...
பகுதி-3 காட்டுயிர்களுக்கான இரையைக் காடுகளே வழங்கிவிடுகிறது. பல்லாயிரம் வருடமாக தொடர்ந்த இந்த நிலையை மிகச் சமீபத்தில் நாம் மாற்றிவிட்டோம். நகரவாசிகள் மலையில் இடம் வாங்கி வாழையை பயிரிட்டனர்.ஆனால் அது யானைகள் நடமாடும் இடம் .அவற்றுக்குப் பசித்தால் இருப்பதை சாப்பிடுவது இயல்பு தானே! இதை ஏற்காமல் யானை தவறு செய்ததாக, ’’எங்கள் நிலத்தில் யானை புகுந்தது, அட்டகாசம் செய்கிறது’’ என்று நாம் பேசத் தொடங்கி இன்று அனைவரின் மனதிலும், ’’யானை தான் ஏதோ தவறு செய்கிறது’’ என்று தோற்றத்தையும் உருவாக்கிவிட்டோம். தொடர்ந்து பத்திரிகையிலும் இப்படியே செய்திகள் வருகின்றன. ...
உங்கள் வீடு உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை… ராமமூர்த்தி சொந்தமாக ஒரு இடத்தை வாங்கினார். அதை தன் உறவினர்கள், நண்பர்களுக்கு மகிழ்ச்சியாக சொன்னார். சட்டப்படி அந்த இடம் அவருக்கு மட்டுமே சொந்தம். அதில் வேறு யாரும் உரிமை கொள்ளவோ, வசிக்கவோ உரிமை இல்லை என்பதை சட்டம் உணர்த்தும். ஆனால் இயற்கை நீதிப்படி ராமமூர்த்தி வாங்கிய இடத்தில் உள்ள மரத்தில் பறவைகள் கூடு கட்டியிருக்கும், அணில்கள் தாவி ஓடும், தரையில் இருந்த ஓணான் ஒன்று மரத்தில் ஏறும், செடிகளை சுற்றி வண்டுகள், பூச்சிகள் பறந்துக் கொண்டு இருக்கும், ...
சென்னையில் வார இறுதி நாட்களில் பெரும்பாலான குடும்பங்கள் மெரினா கடற்கரை, சிட்டி சென்டர், சினிமா தியேட்டர் என்று செல்வது வழக்கம்.. காடுகளைப் பார்க்க வேண்டும் என்றால் பல நூறு கிலோமீட்டர் கடந்து முதுமலை செல்லவேண்டும் என்பதால் 90 சதவிகிதம் மனிதர்கள் கடைசிவரை காடுகளுக்கு செல்வதும் இல்லை, பார்ப்பதும் இல்லை. மற்றும் வீட்டுச் சிறுவர்களுக்கும் காடுகளை அறிமுகப்படுத்துவதில்லை. ஆனால், காடுகள் மிகச் சிறந்த இடமாகும். ஒரு முறை காடுகளுக்குச் சென்று வந்தால் மீண்டும் மீண்டும் அங்குச் செல்லத் தூண்டும். சிறு வயதிலேயே உங்கள் வீட்டு சிறுவர்களை காடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்காக பல நூறு கிலோமீட்டர்கள் ...