எந்த ஒரு தனி நபரைப் பற்றியும் மிகைப்படுத்தப்பட்ட ஒரு பிம்பம் கட்டமைக்கபட்டால்..,முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ’’அந்த நபர் வொர்த் இல்லாதவர் அதனால தான் அவரை தூக்கி நிறுத்த படாதபாடு படறாங்க..அப்படிங்கறத..!’’ அமித்ஷா இதுக்கு முன்னாடி எவ்வளவோ முறை தமிழகத்திற்கு வந்துட்டு போனவரு தானே இப்பம்மட்டும் என்ன இப்படி அலப்பறை வேண்டிக் கிடக்கு! மூவாயிரம் போலீசை பாதுகாப்பு பணியில ஈடுபடுத்தி, சென்னையையே ஸ்தம்பிக்க செய்வானேன்…? வழி நெடுக ஆட்களை நிற்கச் செய்து வரவேற்புகள்..பேனர்கள், பதாகைகள்..இப்படியாக ஒரு உள்துறை அமைச்சர் உலகத் தலைவர் ரேஞ்சிற்கு ...