பாஜக ஆட்சியில் நீதித்துறையின் சுதந்திரம் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அரசுக்கு ஆதரவாக இல்லாத நீதிபதிகள் அநீதிகளுக்கு ஆளாகிறார்கள். எமர்ஜென்ஸியில் நீதித்துறை பாதிக்கப்பட்டதை விட, தற்போது தான் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறது என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சியாகும்;- நீதிபதி ஹரிபரந்தாமன் அலசல்; அமலாக்கத்துறை ,சிபிஐ ,தேர்தல் ஆணையம், கவர்னர்கள் என அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது மத்திய அரசு. இந்த அமைப்புகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு சட்டமும் அனுமதிப்பதுதான்  வருத்தமான விஷயம். உயர் நீதித்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அரசமைப்புச் சட்டத்தை 2014 ...

கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக எத்தனை விவசாயிகளையும் காவு கொடுக்கத் தயார் என வரலாறு காணாத வகையில் இந்தியாவில் காட்டாட்சி நடத்தி வரும் மத்திய பாஜக அரசின் அமைச்சர் அஜய்மிஸ்ரா சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் போராட்டத்தை இரண்டே நிமிடத்தில் முடித்து வைக்க என்னால் முடியும்’’ என்று பேசி இருந்தார்! அதைதான் அவர் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது வன்முறை நிகழ்த்தி பயமுறுத்தி பார்க்க முயன்றுள்ளார்! ஜனநாயகத்தில் கருப்பு கொடி காட்டுவது என்பது அமைதியான வகையில் எதிர்ப்பை தெரிவிக்க செய்யும் ...