ஒரே இந்துத்துவ கொள்கையால் மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சிவசேனா உறவு பூண்டு, கூட்டணி கண்டது. ஆனால், 25 ஆண்டு கால நட்பில் தான் இளைத்தும், பாஜக பெருத்தும் வருவதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டது! அதனால், பாதை மாறி, பயணத்தை தொடர்ந்தது! காத்திருந்த பாஜக, இன்று கருவறுப்பு செய்கிறது! 2019 ம் ஆண்டு நவம்பர் 23 அன்று மராட்டிய கவர்னர் பகத்சிங் கொஷியாரி அதிரடியாக அதிகாலை மூன்று மணிக்கு பாஜகவின் தேவேந்திர பட்நாவிசை முதல்வராகவும் தேசிய காங்கிரசை சேர்ந்த அஜீத் பவாரை துணை முதல்வராகவும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  ...

குற்றவாளிகள் அதிகாரம் மிக்கவர்களாக ஆகிவிடுகிறார்கள்! நிரபராதிகளும், நியாயத்தை கேட்பவர்களும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்! குஜராத் கலவரத்தில் கொல்லப் பட்டவர்களுக்காக இடையறாது துணிச்சலாக குரல் கொடுத்த தீஸ்தா செதல்வாத் கைது செய்துவிட்டால் உண்மைகள் ஊமையாகுமா? உலகையே உலுக்கிய குஜராத் மதவெறிப் படுகொலைகள் தொடர்பான பல வழக்குகளில் குல்பர்க்கா சொசைட்டி என்ற இடத்தில் 68 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் முக்கியமானது! இந்தப் பகுதியில் வசித்த காங்கிரஸ் எம்.பியான ஜாப்ரி அவர்கள்  கலவரக்காரர்கள் தங்களை சூழ்ந்துள்ளது குறித்து அந்த இக்கட்டான நேரத்தில் அன்றைய முதல்வர் மோடி மற்றும் உயர் ...

சுய புத்தியும் இல்லாமல், சொந்த பலமும் தெரியாமல் அடுத்தவர் தயவிலேயே தகுதிக்கு மீறிய பதவிகளை பெற்று அனுபவித்து விட்ட பன்னீர் செல்வம், டெல்லி பாஜக தலைவர்களின் தயவால், தலையீட்டால், மீண்டும் அதிமுகவில் முக்கியத்துவம் பெற முயற்சித்து வருகிறார்! டெல்லியில் இன்று பிரதமரை சந்தித்து பேச முயன்று தோற்றுப் போன பன்னீர் செல்வம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் தலையீட்டை பாஜக தயவில் பெற்று அதிமுகவில் அதிகாரமிக்க பதவியை நிலை நாட்டிக் கொள்ள தவிக்கிறார்! அதிமுக பதவியில் இருந்த போது 11 எம்.பிக்கள் தயவும், பாஜக ...

இந்தியாவிற்குள் தான் பாஜகவின் வெறுப்பு அரசியல் பாச்சா பலிக்கும்! இறை தூதரான நபிகள் நாயகத்தைக் கேவலமாகப் பேசியதால் 57  நாடுகளின் இஸ்லாமிய கூட்டமைப்பு ,வளைகுடா நாடுகள், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவை கடுமையாக கண்டித்தவுடன் பாஜக அரசு அதிர்ந்தது! ஏனென்றால், அதன் விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாதவை! பிரபல “டைம்ஸ் நௌ”-Times Now- டி.வி. சேனலில் கடந்த மே மாதம் 26ந்தேதி ஒரு விவாதம் – தி கியான் வாப்பி ஃபைல்ஸ் என்ற தலைப்பில் – ஒளிபரப்பானது. இதில் பங்கெடுத்த திருமதி. நுபூர் ...

அடுத்தடுத்து காஷ்மீர் பண்டிட்டுகளின் படு கொலைகள்! ”காஷ்மீரின் சமூக உறவுகளை புரிந்து கொள்ளாமல், அரசியல் உள் நோக்கங்களுக்காக ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் செய்யும் அரசியலே இன்று நாங்கள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, வெளியேறும்படி தள்ளப்பட்டு உள்ளோம்” என்கிறது காஷ்மீர் பண்டிட்  கங்க்ரஷன் சமிதி ! காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக 10 பேர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்களாவர். மீண்டும் காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளது! இதைத் தான் பாஜக அரசு விரும்பியதா..? என்ற ...

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இலங்கை தத்தளிக்கிறது. கிட்டத்தட்ட  அத்தகைய ஒரு நெருக்கடியை நோக்கி இந்தியாவும் நகர்ந்து கொண்டிருக்கிறது! மூச்சை திணறடிக்கும் வெளி நாட்டுக் கடன்கள், கடுமையான உரத்தட்டுபாடு, வங்கிகளின் வாராக் கடன்கள்…உள்ளிட்டவை மிரட்டுகின்றன! அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கண்மூடித்தனமான சொத்து குவிப்பும், நேர்மையின்மையும் ஏற்கனவே மக்கள் வாழ்க்கையை பின்னுக்கு தள்ளியுள்ளது ஒரு புறமிருக்க, நமது தற்சார்பின்மையும், இறக்குமதியை நம்பியே விவசாயம், பார்மஸி, பெட்ரோலியம்..உள்ளிட்ட பல துறைகள் இயங்குவதும் நமக்கு பல சிக்கலை தந்து கொண்டுள்ளன. வருங்காலத்தில் இவை வீரியமடையும். மேலும் நாம் அளவுக்கு ...

தயாளன், தாம்பரம், செங்கல்பட்டு பாஜகவை ஆர்.எஸ்.எஸ் வழி நடத்துவதை போல் திராவிட கழகம் திமுகவை ஸ்டாலின் காலத்திற்கு பின் வழி நடத்தினால் ? பாஜகவிற்கும், ஆர்.எஸ்.எஸ்சுக்கும் உள்ள உறவு குரு – சிஷ்ய உறவு! இதில் கமிட்மெண்ட் உண்டு! குருவுக்கு பரிபூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குருவை மிஞ்சியவர்களாக சிஷ்யர்கள் தங்களை ஒரு போதும் கருதுவது இல்லை. கொள்கை இவர்களை வழி நடத்துகிறது. நமக்கு இவர்கள் கொள்கையில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்டமைக்கப் பட்டுள்ளனர் என்பதை மறுக்கமுடியாது. திராவிட இயக்கம் தான் ...

இன்றைய பாஜகவில் கிட்டத்தட்டபாதிப்பேர் காங்கிரசில் இருந்து போனவர்கள்! இன்னும் சிலர் தேதி பார்த்துள்ளனர்! உ.பி.தேர்தலில் பிரச்சாரத்திற்கு காங்கிரசின் முக்கிய தலைவர்கள் போகாதது ஏன்? சித்தாந்த ரீதியாக காங்கிரஸின்  நீண்டகால கொள்கையாளர்களுக்கு ஏன் முக்கிய பதவிகள் கொடுக்கப்படுவதில்லை. சமீபத்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை கணக்கில் எடுத்து பார்த்தால் விரல்விட்டு எண்ணத்தக்க ஓரிவரைத் தவிர அனைவரும் முதியோர்களாகவே இருந்தனர்! காங்கிரஸ் ஓய்வு தேடும் முதியோர் இல்லமாக காட்சியளிப்பது தெரிந்தது. பிரியங்கா காந்தி பேசும் போது, உத்திரபிரதேச தேர்தலை எதிர் கொள்வதில் பாஜக தலைவர்கள் ...

எங்கே பாஜகவின் ஆட்சி நடந்ததோ, அங்கெல்லாம் அவங்க ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள்! அதாவது, அதிகாரத்தால், அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வது என்பது பாஜகவின் பார்முலா! பஞ்சாப்பில் பாஜகவை பஞ்சராக்கிவிட்டார்கள் மக்கள்! மற்ற மாநிலங்களில் எப்படி வெற்றியை கொய்தது பாஜக? பஞ்சாபில் பாஜக வசம் ஆட்சி இல்லாதால் அவர்களால் அங்கே வெற்றி பெற முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு நடந்த மேற்கு வங்க தேர்தலிலும் இதை நாம் பார்த்தோம். பஞ்சாப்பில் சென்ற சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று வந்த காங்கிரஸ் ...

ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம் என்கிற ரீதியில் ஆயூர்வேதத்தை தான் ஆதரிப்போம். சித்தா தேவையில்லை என்கிறது மத்திய அரசு! நீட் தடை மசோதாவை போலவே, சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தையும் முடக்கி வைத்துள்ளார் கவர்னர்! சித்த மருத்துவத்தை சிதைத்து, சமஸ்கிருத ஆயூர்வேதமே சகலமும் என நிறுவ துடிக்கிறார்கள்! ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம் என்பது என்ன? இந்தியா முழுவதையும் ஒற்றை பண்பாட்டில் அடக்க முயலும் ஒன்றிய அரசு இந்திய முழுமைக்குமான ஒற்றை மருத்துவமாக ஆயுர்வேதத்தை முன்மொழிகிறது. சிக்கல் இங்குதான் எழுகிறது தமிழ்நாட்டைத் ...