ஒட்டு கேட்பு, உளவு பார்ப்பு  விவகாரத்தில், சொந்த நாட்டு மக்களை மட்டுமின்றி, சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களைக் கூட உளவுபார்க்கும் ஒரு கோழைத்தனமான அரசாக பாஜக இருந்துள்ளது என்பது தான் இதன் ஹைலைட்டாகும்! இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை என்ற உளவு மென்பொருளை பல்வேறு உலக நாடுகள் தீவிரவாதத் தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியா அரசோ ஊடகவியலாளர்கள், சமூகஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், நீதித் துறையினர்,அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பெரும்புள்ளிகள்  உட்பட 300 பேரை உளவு ...

ஆகஸ்ட் மாதம் 5 , 2019ல் அதிரடியாக அரசியல் பிரிவு 370 ரத்து, தனி அந்தஸ்து ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் -முதன்முறையாக- துண்டாடப்பட்டு மூன்று யூனியன் பிரதேசங்களாக சிறுமைப்படுத்தப்பட்டது. மாநில அந்தஸ்தைஇழந்த காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டது. ஊரடங்கு அமுலுக்கு வந்தது. அனைத்து அரசியல் தலைவர்களும்,தொண்டர்களும் இரவோடிரவாக கைது(பா ஜ க தவிர). இன்டரநெட் இணைப்பபிற்கு தடை,பத்திரிக்கைகள் முடக்கம், கவர்னர் போய் லெப்டின்ன்ட் கவர்னர் வந்தார் . ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஒரு சிறைச்சாலையாக மாறியது. இத்தகைய ஒருதலைபட்சமான, தான்தோன்றித்தனமான, அரசியல் சட்டம் ...

அப்பாடா..! ஒரு வழியாக பிரதமர் வழிக்கு வந்தார்! லட்சக்கணக்கில் உயிரிழப்புகள், ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்கள், தனியார் மருந்து நிறுவனங்களும் மருத்துவமனைகளும் நடத்திக் கொண்டிருக்கும் பகல் கொள்ளைகள்..என எதை பற்றியும் கவலைபடாமல் இரண்டு தனியார் தடுப்பூசி நிறுவனங்களின் லாபத்தை பெருக்குவதிலேயே கண்ணும், கருத்துமாக இயங்கிய மத்திய பாஜக அரசை உச்ச நீதிமன்றம் உலுக்கி எடுத்ததில் வழிக்கு வந்தது பாஜக அரசு! இந்தியாவில் சுதந்திரத்திற்குப்பின் இலவச தடுப்பூசிகள் அம்மை, காலரா போன்ற நோய்களுக்குப் போடப்பட்டு வந்தன,  என்றாலும் 1978ல் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாகப் ...

முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது காந்தி நினைக்கப்பட வேண்டியவராகிறார். விவசாயிகளை – மக்களை – அடிமைப்படுத்தும் மூன்று சட்டங்களை திரும்பப் பெறக் கேட்டு நடக்கும் இந்தப் போராட்டம் காந்தியைக் கொண்டாடும் ஒன்றாகும்! தில்லியின் எல்லையில் நடக்கும் போராட்டம் உலகம் கண்டிராத ஒன்றாக உள்ளது. இது எந்த ஒற்றைத் தலைமையின் கீழும் நடக்கவில்லை! போராட்டத்தில் சிறிதும் வன்முறை இல்லை. ஜன 26 ல் நடந்த வன்முறை – போராட்டத்தின் உறுதி கண்டு பயந்த அரசு செய்வதறியாது – போராட்டத்தை வன்முறையாளர்களின் போராட்டம் என்று  மக்களிடம் சித்தரிக்க ...

அர்னாபின் வாட்ஸ் அப் உரையாடல் தொடர்பாக வெளியான செய்திகள் எதுவுமே புதிதல்ல! ஆனால், அரசியல் தரகராக அல்ல, ஆட்சியின் ஒர் அங்கமாகவே – பல சதி திட்டங்களின் பங்குதாராக – அர்னாப் இருந்துள்ளார் என்ற புரிதலையே பார்தோ தாஸ் குப்தாவுடனான அர்னாப் வாட்ஸ் அப் உரையாடல்கள் நிருபிக்கின்றன…! தேசபக்தியின் பெயரால் எந்த பஞ்சமா பாதங்களையும் செய்யக் கூடிய லைசென்ஸை பாஜக அரசு அர்னாப் கோஸ்வாமிக்கு தந்துள்ளது என்பதை என்னைப் போல ஊடகத்தில் இருக்கும் ஒரு சிலர் ஓயாமல் கூறி வந்ததற்கு சற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன ...

புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ், விதிகளை உருவாக்குவதற்கான கூட்டத்தை தொழிற்சங்கங்கள் புறக்கணித்தன ! பெங்களூருவில், விஸ்ரான் தொழிற்சாலையில்  சமீபத்தில் நடந்த கலவரத்தில் ஆலை அடித்து நொறுக்கப்பட்டது.வாகனங்கள் எரிக்கப்பட்டன.148 பேர் கைது செய்யப்பட்டனர்.அதற்கு காரணம் அங்கு தொழிலாளர்களின் பிரச்சினையைப் பேச சங்கம் இல்லாததுதான். நிரந்தரத் தொழிலாளர்களை விட ஆறு மடங்கு ஒப்பந்த தொழிலாளர் இருந்தால் அங்கு எப்படி தொழில்  அமைதி நிலவும் ? இந்தக்  கலவரமான சூழலைத்தான்  நாடு முழுவதும் உருவாக்கவிருக்கிறது மத்திய அரசு இயற்றியுள்ள புதிய தொழிலாளர் சட்டம். அரசு ஏற்கனவே இருந்த 44 ...

உலகத்தின் பழமையான தொழில் விவசாயம். தற்போது விவசாயிகள் புதுதில்லியை முற்றுகை இட்டு, தங்கள் வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும்போது இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடியுமா என்று நீதிபதிகள் கேட்டனர்; ஆனால் அரசு வழக்கறிஞர் ’முடியாது’ என்கிறார். உச்சநீதிமன்றம் இந்த சட்டங்களுக்கு தடை விதிக்கவில்லை. அதே நேரம் போராட்டத்திற்கு தடை விதிக்கவும் இல்லை. ஏனெனில் அவர்களால் ...

உலகமே பழித்தாலும், நீதிமன்றமே தடை ஏற்படுத்தினாலும், செய்வதெல்லாம் அக்கிரமம் என்று தெரிந்தே செய்வதில் பாஜக அரசுக்கு ஈடு இணை இல்லை என்பதற்கான சிறந்த அத்தாட்சி தான் புதிய பாராளுமன்ற கட்டிட பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா! உலகின் மிக அழகிய பாராளுமன்ற கட்டிடங்களில் நமது டெல்லி பாராளுமன்ற கட்டிடம் முதன்மையானது! இதன் கம்பீரமும்,எழிலும்,அழகியலும் பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும்! இது லார்டு பிரவீன் காலத்தில் ஆறாண்டு கட்டிடப் பணிகளையடுத்து 1927 ல் உருவானது! இன்னும் இரு நூற்றாண்டுகளுக்கும் மேல் தாக்குபிடிக்கும் வண்ணம் உறுதியான பிரிட்டிஷ் ...

வங்கிகளில் பல நூறு கோடி அல்லது பல ஆயிரம் கோடிகள் கடன் பெற்றுவிட்டு தர மறுப்பவர்களின் பெயரை வெளியிட அரசு தயக்கம் காட்டுவது ஏன்? மேலும் அவர்களின் வாரா கடன்களை தள்ளுபடி செய்வது ஏன்?  சிறிய கடன் பெற்றவனை திரும்ப தராவிட்டால் சேதாரப்படுத்தும் அரசு பெரிய கடன் பெற்றவர்களை தப்பிக்க செய்வது ஏன்? வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. வாராக்கடன் என்பது வங்கிகளை மட்டுமல்லாது, பொருளாதாரத்தையும் பாதித்து வருகிறது.இந்தியா முழுவதும் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அதாவது மக்களுக்குச்  சொந்தமானவை. வங்கிகளிடமிருந்து    ...

மத்திய பாஜக அரசு இருக்கிற தொழிலாளர் நலச் சட்டங்களை தூக்கி குப்பையில் எறிந்துவிட்டு, புதிய தொழிலார் சட்ட மசோதாவை விவாதமின்றி, அவசர,அவசரமாக கொண்டு வந்து பாராளுமன்றத்தில் விவாதத்திற்கே வைக்காமல் நிறைவேற்றியுள்ளது.இதனால் இது நாள் வரை தொழிலாளர்கள் பெற்று வந்த உரிமைகளும்,பாதுகாப்பும் இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது. 1880 களில் அமெரிக்கா தொடங்கி ஒவ்வொரு நாட்டிலும் நாளொன்றுக்கு 12 மணி நேரம், அல்லது 10 மணி நேரம் பணியாற்ற முடியாது என்று ரத்தம் சிந்தி, பல உயிர்களை இழந்து,போராடிப் பெற்றதே எட்டு மணி நேர வேலை ...