கே.டி.ராகவன் பாலியல் வீடியோ விவகாரத்தில் பாஜக தலைமை மிக ஜரூராக களம் இறங்கி அவரது களங்கத்தை போக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. சம்பந்தப்பட்ட வீடியோ அழிக்கப்பட்டுவிட்டது. அகில இந்திய அளவில் அவரை காப்பாற்ற நிர்மலா சீதாராமன், பி.எல்.சந்தோஷ், பியூஸ்கோயல் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர். மதன் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது..! ராகவன் விவகாரம் குறித்து போடப்பட்ட கமிட்டியின் தலைவி மலர்கொடி பேசியதில் இருந்தே இந்த விசாரணை குழுவே ராகவனை சிக்கலில் இருந்து காப்பாற்றி, புனிதப்படுத்தத்தான் என நாம் புரிந்து கொள்ளலாம்! மலர்கொடி ...