அதீத பணபலம், அதிகார பலம் தரும் தைரியத்தில் பாஜகவினர் அளப்பரிய குற்றங்களை அஞ்சாமல் செய்யும் துணிச்சல் பெற்றுவிடுகின்றனர். பாஜகவில் பாலியல் எக்ஸ்பிளாய்டேசன் அதிகமாக நடப்பது தொடர் செய்தியாக இருந்தன! பெண்கள் பாதுகாப்பாகவோ, கண்ணியமாகவோ இயங்க முடியாது என்றால் அது என்ன கட்சி? அது என்னவிதமான கலாச்சாரம்..? இது ஏதோ கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல, பாஜகவில் பெண்கள் நிலை குறித்த வெளிப்படையான விசாரணை கோரும் ஒரு விவகாரமாகும்! பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவியே கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்திலேயே ஒரு விசாகா ...