இது பாமகவின் தேர்தல் அறிக்கையா? அல்லது பாஜகவின் தேர்தல் அறிக்கையா? என மீண்டும் அட்டைப்படத்தை பார்க்க வேண்டியதாகிவிட்டது! ஒரு வேளை பாஜகவே இதை டிராப் பண்ணி கொடுத்திருக்கலாமோ… என்றும் தோன்றியது! தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி,ஸ்டாலின்,கமலஹாசன் வரை தேர்தல் தேதி ஆரம்பிப்பதற்கு முன்பே தெருத்தெருவாக பிரச்சாரத்தில் இறங்கி செயல்பட, தேர்தல் அறிக்கை நிகழ்விற்கு கூட வெளியே வர பயந்து கொண்டு, காணொலியில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிஜிட்டல் அரசியல் தலைவர்கள் இந்தியாவிலேயே டாக்டர்.ராமதாஸும், அன்புமணி ராமதாதாஸுமாகத் தான் இருப்பார்கள்! பொதுவாக ...