தமிழக அரசியல் சூழல் மட்டுமல்ல, இந்திய அரசியல் சூழலே தற்போது மூன்று பிரிவுகளாக இயங்குகிறது. # பாஜக ஆதரவு நிலைபாடுள்ள கட்சிகள்! # பாஜகவால் இயக்கப்படும் சிறுகட்சிகள்! # பாஜகவை எதிர்க்கும் கட்சிகள்! இந்த வகையில் தன்னை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளை பாஜகவே வழி நடத்துகிறது! தன்னை வெளிப்படையாக ஆதரிக்க முடியாத வேறுபட்ட கொள்கை அடையாளம் கொண்ட கட்சிகளை எப்படியாவது வளைத்துப் போட்டு அவர்களின் லகானை தன் கையில் வைத்து இயக்குகிறது. மூன்றாவதாக தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றுக்கும் பதறியும்,கதறியும் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தை தன்னை ...