வீட்டு உரிமையாளர்கள், வாடகை வீட்டில் வசிப்போர் என்ற வகையில் நாம் அனைவரும் பல நேரங்களில் சந்திக்கும் சிக்கல்கள், நடைமுறை பிரச்சினைகள், சட்டம் சொல்வது என்ன? ஆகியவற்றை மிக எளிமையாக அனைவரும் புரிந்து, தெளிய எழுதப்பட்டுள்ள நூல்! உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர்?  இந்த கேள்வி தான் வீட்டின் உரிமையாளர் கேட்கும் முதல் கேள்வியாக  இருக்கிறது! வீடு காலியானவுடன் காலியாக உள்ளது என்று இடைத்தரகர்களிடம் வீட்டின் உரிமையாளர் சொல்லுவார் ஆனால், இடைத்தரகர்களுக்குக் கொடுக்கப்படும்  ஒரு மாத வாடகை தொகையை  வாடைக்குச் செல்பவர்தான் கொடுக்க வேண்டும். சமூகத்தில் இது ...

தமிழ்நாட்டில் பதிப்பகங்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அதில் நேர்மையாக எழுத்தாளனுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு தான் பஞ்சமோ பஞ்சம்! உச்சபட்ச பித்தலாட்டமும், சுரண்டலும் நிலவும் துறைகளில் பதிப்பகத் துறை முக்கியமானது. சொன்னால் நம்பமாட்டீர்கள், பல அறிவாளிகளை எல்லாம் அதோகதிக்கு ஆளாகியுள்ளார்கள்! நல்ல வேளையாக எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நேர்மையான மீனாட்சி புத்தக நிலையத்தார் அமைந்தனர்! இந்த பதிப்பகம் வருடம்தோறும் ஜே.கேவுக்கு லட்சக்கணக்கில் ராயல்டி கொடுத்தனர். அவர் இறந்த பிறகும் விற்பனையில் 15% ராயல்டி இன்றும் தந்து வருகின்றனர். ஆனால், பிரபல எழுத்தாளர் சுஜாதாவிற்கு அப்படி அமையவில்லை.மென்மையான சுபாவமும், ...

கொரானா பீதியைக் காட்டி சட்டமன்ற தேர்தல்களோ, உள்ளாட்சி தேர்தல்களோ தள்ளிப் போடப் படுவதில்லை. புத்தகக் கண்காட்சியை மட்டும் தடுத்துவிட்டு, ஏகப்பட்ட கெடுபிடிகளோடு தற்போது நடத்தச் சொல்கிறார்கள்! உற்சாகத்தோடு நடத்த வேண்டிய விழாவை, உறுத்தலோடு நடத்தச் செய்கிறார்கள்! தமிழ் பதிப்பகங்களின் ஒரே நம்பிக்கை வருடத் தொடக்கத்தில் வரும் சென்னை புத்தக கண்காட்சி தாம்! இந்த வருடம் தொடக்கத்தில் நடக்க இருந்ததை, கோவிட் பரவலை காரணமாக்கி, தமிழக  அரசு நடத்தக் கூடாது என்று தடை விதித்துவிட்டது! இந்த கடைசி நேர அறிவிப்பால் ஜனவரி 6 தொடங்க இருந்த ...