சற்றே காலதாமதம் தான்! ஆனாலும், எதிர்விளைவுகள்,விற்பனையை பற்றி பொருட்படுத்தாமல் நடத்தப்படுவதே சிறப்பு தான்! இந்த ஆண்டு கொரானாவை கடந்து பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்துவருகிறது. இது மார்ச் மாதம் 9-ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருத்தரங்க நிகழ்வுகளுடன் நடக்கும். இது இந்தியாவின் முக்கிய புத்தகத் திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. 1976 ல் இச்சங்கம் ஆங்கில நூல்கள் வெளியிடும் பதிப்பகத்தாரால் சுதந்திரப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி மருமகன் கே.கிருஷ்ணமூர்த்தி அவர்களைக் கொண்டு ஆரம்பத்தில் 34 கடைகளுடன் சென்னை அண்ணாசாலையில் உள்ள ...