சுவாசம் என்பது சுகமாக நடந்தால் அது சொர்க்கமான வாழ்க்கையாகும்!.அந்தசுவாசமே சுமையாகிப் போனால் அது நரகமான வாழ்வாகும்! அதைத்தான் ஆஸ்துமா என்றழைக்கிறார்கள்!  ஆஸ்துமா வந்தவர்கள் அடையும் அவஸ்த்தை அதைப் பார்ப்பவர்களையும் பதைபதைக்க வைக்கும்!ஆஸ்த்துமா வந்தவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்! ஆக,ஆஸ்துமா வந்தவர்கள் கொரோனா வராமல் தவிர்த்துக் கொள்ள கீழ்கண்ட இயற்கை வாழ்வியலை பழகி வெற்றி கொள்ளுங்கள்! இப்படியாகஆஸ்துமாவில்அவதிப்படுபவர்கள்இந்தியாவில்இரண்டுகோடிபேர்என்பதுஅதிகாரபூர்வதகவல்! ஆனால்இந்தஎண்ணிக்கைஇரண்டுமடங்கிற்கும்அதிகமாகவேஇருக்கலாம்! காரணம், ஆஸ்துமா வருவதற்கான சுற்றுச்சூழல்கேடு இந்தியாவில் இங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருப்பதால் வியாதிஸ்தர்களும் விருத்தியாகிக் கொண்டே உள்ளனர். குப்பைக் கூளங்கள், சாக்கடை நாற்றம், வாகனப்புகை, தொழிற்சாலைப் ...