திட்டங்களை செயல்படுத்தும் போது கொள்ளை அடிப்பார்கள் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், கொள்ளை அடிப்பதற்காகவே திட்டங்களை தீட்டியவர் பழனிச்சாமி. எந்த ஒரு திட்டத்திலும் எளிய மக்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ற ஒரு நன்மையாவது இருக்கும். ஆனால்,அதையும் கூட இல்லாமலாக்கியவர் பழனிச்சாமி! கடந்த நான்காண்டுகள் பழனிச்சாமி அமைச்சரவையின் பகல் கொள்ளைகள் எப்படி நடந்தன என்பதை பார்ப்போம்! ஐந்து ஆண்டுகள் பொதுப்பணித்துறைக்கும், பத்தாண்டுகள் நெடுஞ்சாலைத்துறைக்கும் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, என்ன செய்திருக்கிறார்? இந்தத் துறைகளில் ஒரே ஒரு பெரிய திட்டத்தையாவது தமிழக மக்களுக்காக ஏற்படுத்தி இருக்கிறாரா? முடித்திருக்கக்கூட ...