ராஜமார்த்தாண்டன், புதுவண்ணாரப் பேட்டை, சென்னை அதிமுக அமைச்சர்கள் மீதான ரெய்டுகள் அறச்சீற்றமா? கண் துடைப்பா? 1996 திமுக ஆட்சியில்ரெய்டுக்குள்ளான முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் ரெய்டு முடிந்த கையோடு கைது செய்யப்பட்டனர்! அதிமுக ஆட்சியில் கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி போன்ற அமைச்சர்களை கைது செய்து சிறையில் தள்ளினார் ஜெயலலிதா! தற்போது ரெய்டுக்கு முன்னும், பின்னும் தெனாவட்டாக பேசி வருகின்றனர் அதிமுக மாஜிக்கள்! முடிவை உங்கள் ஊகத்திற்கே விடுகிறேன். தா. மணிகண்டன், ராஜபாளையம், விருதுநகர் சசிகலாவுக்கு சிறைக்கு சென்ற பொழுது இருந்த தைரியம் கூட இப்பொழுது ...