தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்தும் நல்ல முயற்சியாக தெரிந்தாலும், நடைமுறையில் படு சிக்கலான சட்டமே இது! ஹால்மார்க் முத்திரை இருப்பதாலேயே தரம் உறுதியாகிவிடாது! இதன் நடைமுறைபடுத்தும் வழிமுறைகளைப் பார்க்கும் போது சிறிய நகை வியாபாரிகளை இந்த தொழிலில் இருந்து அப்புறப்படுத்தும் சூழ்ச்சியா..? என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. என்ன செய்யலாம் அரசு? உலகத்திலேயே அதிகமாக தங்க நகைகளை பயன்படுத்தும் நாடு இந்தியா! அதிலும் தமிழகம் முதலிடம்! நகை தயாரிப்பாளர்களில் நேர்மையானவர்கள் மிகக் குறைவு! எத்தனை கேரட் தங்கம் என்பதில் தான் அதன் தரம் இருக்கிறது! ...