திருவொற்றியூரில் 25 ஆண்டு கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது என்றால்…, தற்போது இரண்டரை ஆண்டுகளில் இடிந்து விழத் தயாராக இருக்கும் கே.பி.பார்க் உள்ளிட்ட பல நூறு குடியிருப்புகள் விவகாரத்தில் திமுக அரசு மெளனம் கடைபிடிப்பது ஏன்?  கரப்ஷன் + கமிஷன் + கலெக்‌ஷன் = கழகங்கள்! எந்தக் கட்டிடமும் முறையாகக் கட்டப்பட்டால் குறைந்தபட்சம் 75 ஆண்டுகள் தொடங்கி 100 ஆண்டுகள் நிச்சயம் தாக்குப் பிடிக்கும். ஆனால், அரசு கட்டிக் கொடுக்கும் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகள் மட்டும் ஏன் 25 முதல் 30 ஆண்டுகளில் வாழத் தகுதியற்றுப் ...