ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஆனால்,இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடும் பல்லாயிரகணக்கான அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்கள், துயரங்கள்,சொல்லமுடியாத வலிகள் பொது வெளிக்கு தெரிவதில்லை! இதைக் குறித்து உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள் என்று அவர்களைக் கேட்டிருந்தோம். வழக்கமான தேர்தல் பணி நடைமுறைகளைக் கடந்து தற்போதைய 2021 சட்டமன்றத் தேர்தல் பணிகள், பல அழுத்தங்களை ஆசிரியர்களுக்குத் தந்துள்ளதாக பரவலான கருத்துகள் தமிழகமெங்கும் இருந்து வந்துள்ளன..! அவற்றை இங்கு தொகுத்து தந்துள்ளோம். கடமையைச் செய்ய யாரும் மறுக்கவில்லை. ஆனால் ஆசிரியர்களை அதிக தூரம் அலைய வைப்பதுதான் ...