‘புர்கா அணிந்த மாணவிகளை இனி கல்வி நிறுவனத்திற்குள் அனுமதிக்க மாட்டோம்’ என கர்நாடகாவில் ஒரு புதிய கலகத்தை தூண்டியுள்ளது பாஜக! மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டு இருப்பது இந்திய அளவில் பெரும் விவாதமாகியுள்ளது. இது குறித்து இதுவரை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள் என்னென்ன? கர்நாடகாவில் பள்ளியின் 12ஆம் வகுப்புக்கு இணையான பாடமுறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் இஸ்லாமிய மாணவிகள், புர்காவை அகற்றிய பிறகு வகுப்புகளுக்குச் செல்லுமாறு மாவட்ட உதவி ஆணையர் அந்தஸ்துள்ள அரசு அதிகாரிகள் குழு ஆணையிட்டுள்ளது. ஆனால், மாணவிகள் அதை ஏற்க ...