பிடிக்காதவர்கள் மீது அவதூறு எழுதுவதும், பிடித்தவர்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தாலும் மூடிமறைத்து அலட்சியப்படுத்துவதும் தினமலரின் வாடிக்கை! கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்கான போராட்டம், நீட் எதிர்ப்பு போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம்..போன்ற மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தி எழுதும். கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை இழிவுபடுத்தி எழுதும். முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என சித்தரிக்கும். காவல்துறை என்ன செய்தாலும் கண்ணை மூடி ஆதரிக்கும்! ஏத்தாபூர் வியாபாரி முருகேசன் போலீசால் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் விஷிவலாக வெளியாகி அனைவரும் ...