பாஜகவிடம் மிக முக்கியமான சில குணாம்ச மாற்றங்களை இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பார்க்க முடிகிறது. அது தன் இயல்பேயான மேல் சாதி ஆதிக்கத்தில் இருந்து சற்றே அசைந்து கொடுத்துள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், பெயரளவுக்கேனும் அனைத்து தரப்பினருடனும் இசைந்து வாழ்வது இன்றியமையாதது என்ற புரிதலுக்கு வந்துள்ளது. பாஜகவின் அமைச்சரவை விரிவாக்கத்தின் நோக்கம் ஆட்சி மீது சமீபகாலமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மட்டுப்படுத்தும் முயற்சி தான்! கொரானா கையாளுவதில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவுகள் அந்த துறையின் அமைச்சரான ஹர்ஷவர்த்தனை தூக்கினால் சரியாகிவிடப் போவதில்லை. ...
கலைஞர் உயிரோடு இருக்கும் போது ஸ்டாலின் முதலமைச்சர் ஆக்கப்பட்டிருந்தால், அது கலைஞர் தயவில் வாரிசாக்கப்பட்டதாக விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கும். ஆனால், கலைஞர் மறைவிற்குப் பிறகு குதிரை பேர அரசியலில் இறங்கி குறுக்கு வழியில் முயற்சிக்காமல், நான்கு ஆண்டுகள் எதிர்கட்சித் தலைவர் பங்கு பாத்திரத்தை ஒரளவு சிறப்பாக செய்து, தேர்தலை ஜனநாயக முறையில் எதிர்கொண்டு மக்கள் தீர்ப்புடன் அவர் முதலமைச்சர் ஆகியுள்ளது ஸ்டாலினின் ஆளுமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். அதிக அனுபவசாலிகளும், புதிய ஆற்றலாளர்களும் சரிவிகிதமாக கலந்து உருவாக்கப்பட்ட அமைச்சரவையை ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார். ஒரு தனி நபராலேயே சிறப்பான ...