பத்தடிக்கு பத்தடி கொண்ட தகரக் கொட்டகை! வறுமையின் உச்சம்..! அடிப்படை வசதிகளற்ற அவலங்கள் சுதந்திரமாக நடமாட முடியாத கடுமையான கட்டுபாடுகள்..! மொத்ததில் ஒரு திறந்த வெளி சிறைச்சாலை போலத் தான் இருக்கிறது தமிழ் நாட்டில் 35 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களின் நிலைமை..! ” இலங்கை தமிழர் அகதிகள் முகாமிற்கு நான் சென்று வரும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தாமல் வீடு திரும்பியதில்லை. அந்த அளவுக்கு அங்கு நிலைமை உள்ளது. வெயில் காலத்தில் வீட்டிற்குள் இருக்க முடியாது .வெளியில் வந்து மரத்தின் கீழ்தான் ...