கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்திடவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறார்! இதன் மூலம் தமிழ்நாட்டின் தண்ணீர் பற்றாக்குறை சரி செய்யப்படும் என முதல்வர் உள்ளிட்ட பலரும் நம்புகின்றனர். முதலில் இது சாத்தியமா? என்பதே கேள்விக்குறி தான்! இதன் உண்மை நிலைமையினை விரிவாகப் பார்த்தால் எத்தனை சர்ச்சைகள் ,சவால்கள்,சங்கடங்கள் புதைந்துள்ளன..என வியப்பளிக்கிறது! வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்திய நதிகளை ஒருங்கிணைத்து – பல மாநிலங்களில் பெருமழை வெள்ளச் சேதங்களைக் குறைக்கவும், நாட்டின் ஒரு பகுதியில் கிடைக்கும் மிகை நீரை ...