மோடி – அமித்ஷா கூட்டணியின் மூர்க்கமான நகர்வுகளாக அவசர, அவசரமாக இரு சட்டங்கள்! எதற்கு? சி.பி.ஐ அமைப்பை சிதைக்கவும், அமலாக்கத் துறையை அடிமைத் துறையாக்கவும்! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க சற்று முன்னதாக அவசர அவசரமாக மோடி-ஷா கூட்டணி இரண்டு அவசர சட்டங்களை நவம்பர் 13ந்தேதி பிறப்பித்துள்ளது. அமலாக்கப் பிரிவு இயக்குனர், சி பி ஐ இயக்குனர் ஆகியோரின் பதவிக்காலம் தற்போது இரண்டு ஆண்டுகள் என்று இருப்பதை ஒவ்வொரு வருடமாக நீட்டித்து பதவி தொடரச் செய்யவும், அப்படி ஐந்தாண்டுகள் வரை இத்தகைய பணி நீட்டிப்பு வழங்கவுமான ...
அப்பழுக்கற்ற நேர்மையான சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன் மறைந்துவிட்டார்! பெரும்பாலான காவல் துறை மற்றும் புலனாய்வு துறையினருக்கென்றே இயல்பாக இருக்கும் கள்ளம், கபடம், சூது என எதுவமற்ற ஒரு வெள்ளந்தி மனிதர் அவர்! அவரைப் போன்றவர்கள் அபூர்வத்திலும், அபூர்வம்.! எதையும் நேர்பட பார்க்கும் குணம், மனதில் எதையும் மறைத்து வைத்துக் கொள்ள முடியாத மனோபாவம், சமரசமற்ற போக்குகள், உண்மை என்று உணர்ந்ததை யாருக்கும் அஞ்சாமல் மட்டுமல்ல, அதனால் தனக்கே கூட பாதிப்பு வரும் என்றாலும் கூட வெளிப்படுத்திவிடக் கூடியவர். இந்த குணங்கள் போதாதா..? அவர் என் ...