நமது ஒன்றிய அரசின் அறிக்கை மற்றும் விளம்பரங்களில் தற்போதைய இந்தியாவின் சுதந்திர தினம் 75 என குறிப்பிட்டு கொண்டாடப்படுகிறது! பாஜகவும் இந்த சுதந்திர தினத்தை 75 வது சுதந்திர தின ஆண்டாகத் தான் கொண்டாடுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 75 வது ஆண்டை குறிப்பிடும் விதமாக ஒரு லோகோவும் வெளியிட்டு 75 இடங்களில் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்! உலகத்தில் யாருக்கும் இல்லாத தேசப்பற்று தங்களுக்குத் தான் இருக்கிறது என பறைசாற்றிக் கொள்ளும் பாஜக இப்படி சுதந்திர தினத்தை தப்புத் தப்பாக கணக்கிட்டு கொண்டாடுவதை ...