‘மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கு’ என்று சுவரில் எழுதி வைத்து இருப்பதை சிறுவயதில் பள்ளிக்கு நடந்து போகும்போது பார்த்து இருக்கிறேன். அதன் அருகில் பெரியார் படத்தை வரைந்திருப்பார்கள். ‘மண்டல்’ என்பது ஒரு பெயர் என்பது உயர்நிலைப்பள்ளி மாணவர்களாகிய எங்களுக்கு அப்போது தெரியாது. வி்.பி. சிங் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் மண்டல் என்ற பெயர் இல்லாத செய்திப் பத்திரிகைகளைக் காண முடியாது. 2021 க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி ...