விவசாயக் கூலி, தள்ளுவண்டிக்காரர், தினக் கூலிகள், ஆட்டோ தொழிலாளி, வீட்டு வேலை செய்யும் பெண்கள் இவர்களைப் போன்ற ஏழை, எளியவர்கள் எல்லாம் 60 வயதானதும் பென்ஷன் வாங்குவதற்கு அரசு ஒரு எளிய திட்டம் வைத்துள்ளது! அதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், நிரந்தரமில்லாத வேலை செய்து கொண்டு இருக்கும் ஏழை, எளியவர்கள், தினக் கூலியாளர்கள் எந்த நேரமும் பொருளாதாரச் சிக்கலில் இருப்பார்கள். வருமானம் பற்றாக்குறையாகவே இருக்கும். 60 வயதுக்கு பிறகு பொருளாதார ரீதியாக எப்படி வாழப் போகிறோம் என்று யோசித்தே ...
சத்துணவு, அங்கன்வாடி, ரேஷன்கடை போன்ற பல திட்டங்களில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாகும்! நம்மைப் பார்த்து மற்ற மாநிலங்கள் பின்பற்றின. தற்போது நீட் தேர்வு எதிர்ப்பிலும் இந்தியாவிற்கே முன்னோடி முன்னோடியாக உள்ளது! ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு எதிர்த்ததை போல, தொழிலாளர் விரோத சட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பது தமிழக தொழிற்சங்கங்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கட்டடத் தொழிலாளர், ஆட்டோ தொழிலாளர், விவசாயத் தொழிலாளர், வீட்டுவேலை செய்பவர்களின் நலனுக்காக அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளைப் ...
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பாதிக்கப்பட்டு ஆயுதப் படை காவலர் வேலுச்சாமி தன் ஆயுளையே முடிவுக்கு கொண்டு வர முயன்றது அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது! ஆன்லைன் சூதாட்டத்தால் அந்நிய நாட்டு பெருநிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளிச் செல்வதோடு, பல குடும்பங்களையும் அழிவுக்கு தள்ளிவருகின்றனர். மக்களும், மாநில முதல்வர்களும் வலியுறுத்திய போதிலும் இதற்கு முடிவு கட்ட விரும்பாமல் மத்திய அரசு கள்ள மெளனம் சாதிப்பதின் பின்னணி என்ன..? சூதாட்டத்தின் விளைவாக ஏற்பட்ட மாபெரும் போரே மகாபாரதம் எனும் காவியம்! சூதாட்டத்தால் மானம், மரியாதை பறிபோய், ஒட்டுமொத்த குடும்பமே அழியும் ...
தமிழக அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி .ஆர். பாண்டியன் இன்று மதியம் ” அறம்” இணையதள இதழுக்கு அளித்த பேட்டி: ” மேகதாது அணை கட்டும் வரைவு திட்டத்திற்கு அனுமதி அளித்ததன் மூலம் ஒரு சட்ட விரோத செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.இந்த செயலால்இரு மாநில நல்லுறவுக்கு சீர்கேடு ஏற்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது. காவிரி பிரச்சினைக்கு நடுவண் அரசால் தீர்வு காண முடியாத நிலைமை ஏற்பட்டதால்தான், நடுவர் மன்றத்தில் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டது. நடுவர் மன்ற தீர்ப்பு வெளியாகி ,ஒவ்வொரு ...
தமிழ்நாட்டை விட்டுவிடக் கூடாது இந்தியாவின் மிக முக்கிய மாநிலமான தமிழ் நாட்டிற்கும் அமைச்சரவைரையில் ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று பாஜக மேலிடம் முடிவெடுத்த போது, அவர்கள் தோழமை கட்சியான அதிமுகவிற்கு தான் அதை முதலில் கொடுக்கத் திட்டமிட்டனர். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று எந்த காரணத்தைக் கொண்டும் பாஜகவை மீறி அதிமுக செயல்படாது என்பது மட்டுமல்ல. பாஜகவின் மீதான அதிமுக விசுவாசத்தை நிலைபெறச் செய்யவும் இது உதவும். இரண்டாவது அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் – குறிப்பாக பன்னீர் மற்றும் எடப்பாடி பொறுப்பில் ...
ஸ்டாலினின் டெல்லி விசிட் உணர்த்தும் உண்மை என்ன..? பிரதமருடனான சந்திப்பால் தமிழ் நாட்டிற்கு பிரயோஜனமுள்ளதா.? என்றால், ஸ்டாலின் தந்துள்ள 25 கோரிக்கைகளில் சரிபாதிக்கு மேற்பட்டவை தற்போதைய ஒன்றிய அரசின் கொள்கைக்கு நேர் எதிரானவை! எதிர்கால கலக அரசியலுக்கான ஒரு கிளியரான மெசேஜ் இந்த கழக ஆட்சி வைத்துள்ள கோரிக்கைகளில் புதைந்துள்ளன..! ”பிரதமர் நம்பிக்கையோடு இருங்கள் என தெரிவித்தார். எதை வேண்டுமானாலும் என்னிடம் நேரடியாகக் கேளுங்கள்’’ என்றார் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம்! செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசு தானே ஏற்று நடத்தக் ...
ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்க டெல்லி அரசுக்கு அனுமதி மறுப்பு! நாளும் ஒரு நெருக்கடி மேற்கு வங்க மம்தா அரசுக்கு..! மகாராஷ்டிரா அரசுக்கு மருந்து, மாத்திரைகள் கிடைப்பதில் தடங்கல் தரப்படுகிறது! தடுப்பூசி மருந்துகள் தயாரிக்க தமிழ்நாடு அரசுக்கோ தடங்கல்கள்…! மக்கள் சேவை செய்ய மாநில அரசுகள் மத்திய அரசிடம் மண்டியிட்டு மன்றாடுவதற்கா சுதந்திரம் வாங்கினோம்..? அரவிந்த் கெஜ்ரிவால் என்ன கேட்டுவிட்டார் பாஜகவினர் அவர் மீது பாய்கிறார்கள்! அவரைத் தான் இன்றைக்கு இருப்பதிலேயே மிக ஆபத்தானவராக பார்க்கிறது பாஜக அரசு! மக்கள் நலனில் ...
மத்திய – மாநில அரசுக்கிடையிலான அதிகார பகிர்வு, கடைபிடிக்க வேண்டிய உறவுகள்.. ஆகியவை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலகட்டம் வந்துள்ளது! ”பரஸ்பர மரியாதையா..? ஆண்டான் – அடிமை உறவா..?” – இரண்டில் ஒரு முடிவுக்கு வந்தேயாக வேண்டும்.! ‘’பேசுவதற்கு வாய்ப்பில்லை’’, ‘’அமைச்சருக்கு அழைப்பில்லை, அவருக்கு கீழ் இருக்கும் அதிகாரிக்கு தான் அழைப்பு’’ ஐந்து நிமிஷம் பேசத் தான் அனுமதி மாநிலஅரசு அதிகாரிகளை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பந்தாடுவேன். என்ற ஆதிக்க மன நிலையில் இனி மத்திய அரசாங்கம் செயல்படுவது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது! ‘’மாநில அரசுகள் ...