உண்மைகளை ஊனப்படுத்தி, பொய்களைக் கொண்டு ஊர்வலம் நடத்துகிறது காஷ்மீர் பைல்ஸ்! இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் நமக்கு வேண்டும்.காஷ்மீர் தொடர்பான உண்மைகளை நாம் வெளிப்படுத்த வேண்டும். காஷ்மீர் பண்டிட்களை தொடர்ந்து அகதிகளாக வைத்து பாஜக அரசியல் செய்வதை அம்பலப்படுத்த வேண்டும். ‘பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைக் களம்’, என்ற கோவையைச் சார்ந்த அமைப்பு,  ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம்  குறித்த கருத்தரங்கை நடத்தியது. இதில் இலக்கியவாதியும், அரபு   நாடுகளின் அரசியலை கூர்ந்து பார்ப்பவருமான இரா. முருகவேள்,  உரையாடினார். இசுலாமியர்களுக்கும், பெருந்தன்மையான பொதுச் ...