ஜூலை 26ஆம் தேதியுடன் ஏழு மாதங்களை நிறைவு செய்கிறது, மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராகவும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம் கோரியும்,டெல்லி நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம்! யாருக்கும் தெரியாமல் ஊரடங்கிய நேரத்தில் 2020 ஜூன் 6ஆம் தேதி, மூன்று அவசரச் சட்டங்களாகப் கொண்டுவரப்பட்டு,செப்டம்பர் 3வது வாரத்தில்,அனைத்து சனநாயக விதிகளையும், மரபுகளையும் காற்றில் பறக்கவிட்டு, நாடாளுமன்றத்தில் சட்டங்களாக இவை நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவசர அவசரமாக கொண்டுவருவதால் பெரியளவிற்கு எதிர்ப்பு இருக்காது,அப்படியே இருந்தாலும் சமாளித்து விடலாம்’ என்ற மூடநம்பிக்கையில் ஒன்றிய அரசு,முன் யோசனையில்லாமல் ...