சென்னை ஐஐடி, ஒரு உயர் கல்விக்கான நிறுவனம்! ஆனால், அதில் துயர் மரணங்களும், மாணவிகள் பாலியல் துன்புறுத்தல், சாதியப் பாகுபாடு குற்றச்சாட்டுகள் போன்றவையும் தொடந்து நடந்த வண்ணம் உள்ளன! ஆனால், அவற்றில் சட்டப்படியான நடவடிக்கைகள் என்பது சாத்தியமில்லாமலே போய்க் கொண்டிருப்பதன் மர்மம் என்ன? 2018 தொடங்கி தற்போது வரையில் சென்னை ஐஐடியில் ஆறேழு மாணவ,மாணவிகள் மரணித்துள்ளனர். கொலையா அல்லது தற்கொலையா என வகைப்படுத்த முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு இந்த மாணவர்கள் இறப்பதும், அவை தொடர்பான பல உண்மைகள் வெளி வந்தும் இன்று ...

ஒரு பத்திரிகையாளன் பார்வையில் சொன்னால், இது போன்ற ஒரு பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியை சென்னை கண்டதில்லை! தீவுத்திடலில் 500 நாட்டுப்புற கலைஞர்களின் அசத்தலான பல தரப்பட்ட கலை நிகழ்வுகளைக் கண்டு பரவசப்பட்டவர்கள் இதை ஆயுளுக்கும் மறக்க மாட்டார்கள்! தமிழக அரசின் கலை, பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த “நம்ம ஊரு திருவிழா”,சென்னை தீவுத் திடலில் நேற்று (21.03.22) மாலை நடைபெற்றது. இந்த விழாவை பார்க்க  மனைவி மற்றும் மகளுடன் சென்றிருந்தேன். நாங்கள் சென்ற போது மணி இரவு 8.00.சின்னப் பொண்ணு, ...

கொரானா பீதியைக் காட்டி சட்டமன்ற தேர்தல்களோ, உள்ளாட்சி தேர்தல்களோ தள்ளிப் போடப் படுவதில்லை. புத்தகக் கண்காட்சியை மட்டும் தடுத்துவிட்டு, ஏகப்பட்ட கெடுபிடிகளோடு தற்போது நடத்தச் சொல்கிறார்கள்! உற்சாகத்தோடு நடத்த வேண்டிய விழாவை, உறுத்தலோடு நடத்தச் செய்கிறார்கள்! தமிழ் பதிப்பகங்களின் ஒரே நம்பிக்கை வருடத் தொடக்கத்தில் வரும் சென்னை புத்தக கண்காட்சி தாம்! இந்த வருடம் தொடக்கத்தில் நடக்க இருந்ததை, கோவிட் பரவலை காரணமாக்கி, தமிழக  அரசு நடத்தக் கூடாது என்று தடை விதித்துவிட்டது! இந்த கடைசி நேர அறிவிப்பால் ஜனவரி 6 தொடங்க இருந்த ...

மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர், அமைச்சர்கள், சட்டங்கள்.. ஆகிய எதுவும், யாரும் நெருங்க முடியாத சர்வ அதிகாரத்துடன் வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. தொழிலாளர்கள், அவர்களுக்கு பழுதடைந்தால் வீசி எறிந்து விடத்தக்க நடமாடும் இயந்திரங்களே..! தொழில் தொடங்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து தந்து வெளி நாட்டு நிறுவனங்களுக்கு பல நூறு ஏக்கர் நிலங்கள் வழங்கி, அந்த நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் உள்ளிட்ட பலவும் செய்து தந்து ஊக்குவிக்கின்றன மத்திய மாநில அரசாங்கங்கள்! ஆனால், இப்படி தங்களுக்கு தரப்பட்ட சலுகைகளைக் கொண்டு நம் நாட்டிற்குள்ளேயே ஒரு ...

சென்னைக்குக் கூடுதல் குடிநீர் வழங்கிட, காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர ரூ.5000 – ரூ6000 கோடியில் சிறப்புத் திட்டம் ஒன்று விரைவில் செயற்படுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். ஆனால், நீர்வள வல்லுநர் டாக்டர் எஸ்.ஜனகராஜன் ‘இது ஒரு தேவையற்ற வீண் செலவுத் திட்டம்” என்றும் ‘சென்னை மாநகரப் பகுதியில் ஆண்டுதோறும் பெய்யும் மழையினை (1350 மிமீ) முறையாகச் சேமித்து வைத்தாலே கூடுதலாகச் சுமார் 50 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்; சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையினை இதைக் கொண்டே நிறைவு செய்யலாம்” ...