சீனா ஒரு ஆபத்தான நாடு என்பதில் சந்தேகமில்லை. அது உலக அளவில் ஒரு ஆக்கிரமிப்பாளராக உருமாறி வருகிறது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை! ஆனால்,தற்போதைய சீன இந்திய மோதலுக்கு சீனா மட்டுமே காரணம் என்றால்,அது நம்மை நாமே ஏமாற்றுவதாகத் தான் முடியும்! ரஷ்யாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கும்,சீன வெளியுறவு அமைச்சர் வாங்யிக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவை இரு நாடுகளாலும் எட்டமுடியவில்லை!  அதற்கு முன்பு ராஜ்நாத்சிங் சீன அமைச்சரிடம் பேசியது பலனளிக்கவில்லை. இரு தரப்புமே ஒன்றையொன்று நம்ப தயாராயில்லாததே காரணமாகும்! எல்லையில் எந்த நேரம் ...