இந்த விவகாரத்தை மீண்டும், மீண்டும் பேசுவதும், எழுதுவதும் சலிப்பாக உள்ளது! வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை என்ன..? சின்மயிக்கு ஏதாவது உள் நோக்கங்கள் உள்ளனவா? தனிமனித பலவீனங்களை சமூக அங்கீகாரத்திற்கு தடையாக்கலாமா..? ஒரு படைப்பாளியையும், அவன் படைப்புகளையும் பிரித்து பார்க்க வேண்டுமா..? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்த விவகாரம்..! பல்வேறு குழப்பங்கள், குதர்க்கங்கள் நிறைந்த இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு பிறக்க இந்த கட்டுரை உதவலாம் என நினைக்கிறேன். முதலாவதாக இந்த விவகாரத்தை சாதிப் பற்று, மொழிப்பற்று, கட்டமைக்கப்பட்ட இமேஜ் ...