கணவன், மனைவி இருவரும் வழக்கறிஞர்கள்! ஒரு பாலியல் வழக்கில் பெண்ணுக்கு கணவனும், ஆணுக்கு மனைவியும் ஆஜராகி வாதாடுகிறார்கள்! யார் வெற்றி பெறுகிறார்? இதனால், தொழில் முறையில் எதிர்ரெதிர் நிலையில் நிற்கும் இருவருக்குமான குடும்ப உறவில் ஏற்படும் விரிசல்கள் என்னானது? நீதிமன்றத்தில் நடைபெறும் கதை என்று புரிதலுக்காகச் சொல்லலாம். இந்தப் படத்தில் எபினும், மாதவியும் திருமணமாகாத இளம் வழக்கறிஞர்கள். எபின், சுயேச்சையாக தொழில் நடத்த ஒரு அலுவலகம் போட நினைக்கையில் அவனுக்கு அரசாங்க வழக்கறிஞர் பதவி கிடைக்கிறது. டொவினோ தாமஸ், எபினாக நடித்துள்ளார். கணவன் குற்றவாளியாக ...

சமகால அரசியல்,சமூகம் குறித்து ஒரு தெளிந்த பார்வையுடன் எடுக்கப்பட்டுள்ள படம் தான் ஜன கண மன! காவல் துறையின் என்கெண்டர், கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாகுபாடுகள், ஊடக மற்றும் சோஷியல் மீடியாக்களின் போக்குகள், அனல் பறக்கும் நீதிமன்ற வாதங்கள் என்பதாக வந்திருக்கும் தரமான படம்! “என் மாணவர்கள் தான் என் அடையாளம்” என்று அர்ப்பணிப்போடு கற்பிக்கும் பல்கலைக்கழக பேராசிரியையான சபா மரியம் தீ வைத்துக் கொளுத்திக் கொல்லப்படுகிறார்! பேராசிரியையின் எரிக்கப்பட்ட உடலை காவல்துறை கண்டுபிடிக்கிறது. அன்று இரவே, பேராசிரியை வன்புணர்வு செய்து கொளுத்தப்பட்டதாக எல்லா ...

2021 ல் தமிழ் சினிமா எப்படி இருந்தது..என்று பார்க்கும் போது, படு பிற்போக்கான ஹீரோயிசப் படங்கள், ரத்த வாடை வீசும் வன்முறை படங்களுக்கு மத்தியில், நம்மை பெருமிதம் கொள்ள வைத்த படங்களும் கணிசமாகவே வெளியாகியுள்ளன! பெருந்தொற்று காலம் சற்றே மட்டுப்பட்ட ஜனவரி 2021 தொடங்கிய போது, அணை போட்டு தடுக்கப்பட்டிருந்த வெள்ளம் பீறிட்டு பாய்வது போல மாஸ்டர்,கர்ணன், ஈஸ்வர்ன், பூமி,காடன், அதிகாரம்..என வரிசையாக படங்கள் வெளியாயின! அதற்குப் பிறகு சற்றே தொய்வு ஏற்பட்டு, பிறகு மீண்டும் வீரியம் பெற்று ஆண்டு முழுவதற்குமாக சுமார் 180 ...