உலகில் அடிமைத் தனத்திற்கு பேர் போனதில் தமிழ் சினிமா துறையை மிஞ்ச வேறொன்றில்லை. திரைத் துறைக்கு தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், திரை அரங்க உரிமையாளர் சங்கம்.. எனப் பல சங்கங்கள் உண்டு. இவை எல்லாம் உதயநிதி என்ற ஒற்றை மனிதரின் விரலசைவுக்கு கட்டுப்பட்டு பிழைப்பு நடத்துவதை என்னென்பது? இன்றைய தினம் திரைத் துறையில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது எனக்காக! தியேட்டர்கள் கட்டப்பட்டு இருப்பது எனக்காக! என உதயநிதி நம்புகிறார்! இன்றைக்கு முக்கிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரெட்ஜெயண்டை மீறி வேறொரு நிறுவனத்தால் ரிலீஸ் செய்ய ...

சின்னப்பா பாகவதர் காலம் தொடங்கி சினிமாவில் சிகரெட் காட்சிகள் குறையின்றி தொடர்ந்து கொண்டுள்ளன! மக்களிடம் மிக வலுவான தாக்கம் ஏற்படுத்தும் துறைகளில் முக்கியமானது சினிமா. சினிமாவில் வரும் எது ஒன்றும் பிரபலமாகும், பின்பற்றப்படும். பொதுவாக சிகரெட் பிடிப்பது குற்றமாக கருதப்பட்ட நமது சமூகத்தில் அதை கடைக்கோடி மனிதன் வரைக்கும் சகஜமான ஒன்றாக மாற்றியதில் திரைப்படத் துறைக்கு பங்கிருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பலரிடம் நடந்தப்பட்ட அந்த ஆய்வில் 53 சதவிகிதமானோர் தங்கள் புகைப்பழக்கத்திற்கு சினிமா ஒரு தூண்டுதலாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து தான் ...

சினிமா – நேற்று இன்று நாளை-1 90 வருடப் பயணத்தில் தமிழ்ச் சினிமா கடந்து வந்துள்ள பாதை சுவாரசியமானது! முதல் இருபதாண்டுகள் புராண, இதிகாசங்களிலேயே மூழ்கி திளைத்த நிலையிலும் கூட சமூக மாற்றத்திற்கான தேடல்களும், அதற்கான குரல்களும் இருக்கவே செய்தன..! இன்றைக்கு திரும்பிப் பார்த்தாலும் பிரமிக்கதக்க மாற்றங்கள் நடந்துள்ளதை உணரமுடிகிறது..! தமிழ்ச் சினிமா பேசத் தொடங்கி 90 ஆண்டுகள் நிறைவு பெறுகிற இந்நாளில், தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது . அமெரிக்காவில்அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில், வெளிநாட்டு படங்களுக்கான ...

இதைவிட கேவலமாக சமகால வரலாறை படமாக்க முடியாது. ராயப்பேட்டை உட்லாண்ட்ஸ் தியேட்டரில் மொத்தமே அதிகபட்சம் 35 பேர் மட்டுமே படம் பார்த்தனர். அதிமுகவினரே இந்த படத்தை ஏற்கமாட்டார்கள்! ஜெயலலிதாவை மிகைப்பட உயர்த்தி சொல்ல வேண்டும் என நினைப்பது தவறல்ல. ஆனால், அதற்காக அவரைத் தவிர அவர் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் – எம்.ஜி.ஆர் உட்பட – டம்மியாக்கி இருக்க வேண்டியதில்லை. ஒரு வரலாற்றை சற்று அலங்காரப்படுத்தி தோற்றம் தருவது என்பது வேறு! உள் நோக்கத்துடன் சிதைப்பது வேறு! எம்.ஜி.ஆருக்கு வணக்கம் போடுவது நாய்க்கு வணக்கம் ...