‘தடுப்பூசி உற்பத்தியை தடை செய்து சுகாதாரத் துறையை சூறையாடிய அன்புமணி’ என்ற கட்டுரையை நமது அறம் இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தோம்! அதற்கு விரிவான ஒரு மறுப்பு கட்டுரையை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் திரு.அன்புமணி நமக்கு அனுப்பினார். அந்த மறுப்பு பிரசுரமாகியுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி தன்னிறைவை அழிக்கவில்லை,அடித்தளமிட்டேன் தடுப்பூசி விவகாரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்கள் மட்டுமே இன்று ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன! அவர்கள் வைத்ததே விலை! 138 கோடி மக்களின் உயிர் அவர்கள் தயவில் என்றாகிவிட்டது. பொதுத் துறை நிறுவனங்களை அன்புமணி ...