என்ன தகுதியில் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் பழனிச்சாமி? அதிர்ஷ்ட வசத்தால் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை சாதாரண அளவில் கூட கவனம் பெற்றவரல்ல! தலைவர் என்பது இருக்கட்டும், சிறந்த தொண்டராகக் கூட ஆரம்ப காலம் தொட்டு அறியப்பட்டவரில்லையே…! முதலமைச்சராகக் கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது செய்யப் பயன்படுத்தவில்லையே! எந்த ஒரு விஷயத்திலுமே இவரது நிர்வாகத் திறமை வெளிப்படவில்லை என்பது மட்டுமல்ல, எதிலும்,குழப்பம்,குளறுபடி என ஆட்சி செய்தவர் தான் பழனிச்சாமி. இவர் ஆட்சியில் அமர்ந்தது முதல் ஒவ்வொரு துறையிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. எதிலும் கமிஷன்,எதற்கெடுத்தாலும் கமிஷன் என ’கரப்ஷன்’ ராஜ்யத்தில் கைதேர்ந்தவர் ...