இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்ததாக சென்ற ஆண்டு தம்பட்டம் அடித்தது ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சகம்! இந்த ஆண்டு நிலக்கரி உற்பத்தி குறைந்ததால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்திருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தன்னை திட்டமிடல் இல்லாத ஓர் அரசாகத் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டே வருகிறது. கொரோனா தடுப்பூசிகளிலும் கூட உற்பத்தி செய்த தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து ...