‘புர்கா அணிந்த மாணவிகளை இனி கல்வி நிறுவனத்திற்குள் அனுமதிக்க மாட்டோம்’ என கர்நாடகாவில் ஒரு புதிய கலகத்தை தூண்டியுள்ளது பாஜக! மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டு இருப்பது இந்திய அளவில் பெரும் விவாதமாகியுள்ளது. இது குறித்து இதுவரை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள் என்னென்ன? கர்நாடகாவில் பள்ளியின் 12ஆம் வகுப்புக்கு இணையான பாடமுறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் இஸ்லாமிய மாணவிகள், புர்காவை அகற்றிய பிறகு வகுப்புகளுக்குச் செல்லுமாறு மாவட்ட உதவி ஆணையர் அந்தஸ்துள்ள அரசு அதிகாரிகள் குழு ஆணையிட்டுள்ளது. ஆனால், மாணவிகள் அதை ஏற்க ...

அறம் நிலைக்கச் செய்வதற்கான ஒரு துறையை இந்துத்துவ போட்டி அரசியலுக்கான கருவியாக்கப் பார்க்கிறதா திமுக அரசு..? அறநிலையத்துறை கல்லூரிகளில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை என்றால், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் வேலை பார்க்கும் இந்துக்கள் நிலை என்னாவது..? மத்திய அரசு நிர்பந்திக்கிறதா? மாநில அரசின் மனநிலை மாறிக் கொண்டிருக்கிறதா..? அறநிலையத் துறை வரலாற்றில் இவரைப் போன்ற செயல் திறனுள்ள இன்னொருவரில்லை எனச் சொல்லத் தக்க வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆட்சியாளர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள், கடவுளை வெறுப்பவர்கள் என்று ...

கொரோனா கால இடைவெளிக்கு பிறகு கல்லூரிகள் திறக்கும் நிலையில், நெஞ்சை உலுக்கும் சில உண்மைகளை கவனப்படுத்த வேண்டியுள்ளது! கல்வி நிறுவன முதலாளிகளில் சிலர் எவ்வளவு களவாணிகளாக உள்ளனர்..! தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பலர் வாழ்க்கை எவ்வளவு அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பன அதிர்ச்சியளிக்கிறது..! திருநெல்வேலியை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் சம்பளம் மாதம் ரூ 18,000. த்தில் இருந்து  படிப்படியாக குறைக்கப்பட்டு  இந்த கொரோனா தொற்று காலத்தில் ரூபாய் 3000-ஐ தொட்ட நிகழ்வு   பெருஞ் செய்தியாக சமூக ஊடகங்களில் வெளியானது. இதுபோன்ற வருவாய் ...