ஜெயலலிதா இறப்பு இன்னும் மர்மமாகவே தொடர்கிறது! மக்களுக்கு முதலில் அப்பல்லோ மீதும், சசிகலா மீதும் தான் அதிக கோபம் இருந்தது. ஆனால், தற்போது ஒ.பி.எஸ்சின் மீதும் அந்த கோபம் ஏற்பட்டுவிட்டது. எத்தனையெத்தனை மழுப்பல்கள், முரண்கள்! 50 கோடி செலவில் ஐந்தாண்டு விசாரணை எல்லாம் வீணா? ஜெயலலிதா மரணத்தில் பல ஆழமான சந்தேகங்கள் இன்னும் மக்கள் மனதை அழுத்திக் கொண்டே உள்ளன…! விசாரணை கமிஷன் அமைத்து மூன்றே மாதத்தில் அல்லது அதிகபட்சம் ஒரே ஆண்டில் உண்மையை வெளிக் கொண்டு வருவோம் என்றார்கள் ஓ.பி.எஸ்சும்,இ.பி.எஸ்சும்! உச்ச நீதிமன்றத்தில் ...
நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு இது வரை சம்பளமாக மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் செலவாகியுள்ளது! இது தவிர ஆணையத்திற்கான நிர்வாக செலவுகளுக்காக மேலும் சில கோடிகள் செலவாகியுள்ளது! ஏறத்தாழ ஒன்பது முறை ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25, 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இந்த கமிஷன் மூன்று மாதத்திற்குள் விசாரித்து உண்மைகளை வெளிக்கொணரும் என அன்றைய அதிமுக ஆட்சி கூறியது. ஆனால், எப்போது உண்மைகள் வெளியாகும் என்பது மட்டுமல்ல, உண்மை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா..? என்பதற்கான உத்திரவாதமும் கிடைத்தபாடில்லை! இந்தச் ...
எதற்காக மனித உரிமை ஆணையம்..? மனித உரிமையாவது..மண்ணாங்கட்டியாவது.. என்பவரா மனித உரிமை ஆணையத்தின் தலைவர்..! அருண்மிஸ்ரா நீதிபதியாக இருந்த போது வழங்கிய தீர்ப்புகள் சொல்கின்றன..அவர் எதற்கான தகுதி கொண்டவர் என….! இனி மனித உரிமை ஆணையத்தின் எதிர்காலம் என்னாகும்…? ” அதிகாரத்தை சந்தேகிக்காதவர்கள், ஆதிக்கத்தை கேள்வி கேட்க முடியாதவர்கள் உரிமைகளுக்கான இயக்கத்தில் பங்களிக்க முடியாது ” என்பார் மனித உரிமைப் போராளி பேரா.கே.பாலகோபால். அரசாங்கத்தாலோ,அதிகாரிகளாலோ பாதிக்கப்பட்டால், சாதாரண மக்களுக்கு உடனடியாக ஞாபகம் வருவது மனித உரிமை ஆணையம்தான். அதற்கு தலைவராக ஓய்வு பெற்ற உச்ச ...