இலக்கியம்,அரசியல்,தத்துவம், திரைப்பட ஆய்வுகள், மொழிபெயர்ப்பு என சர்வதேச தளத்தில் இயங்கி வருபவர் யமுனா ராஜேந்திரன். ஜெயமோகனின் துவேஷ இலக்கியச் செயல்பாடுகள், பெண் புரட்சியாளர் ரோசா லுக்சம்பர்க், உலக அளவில் இன்றைய கம்யூனிச செயல்பாடுகள், ரஷ்யாவில் நடப்பது என்ன..? இலங்கை நிலவரம் ஆகியவை பற்றி யமுனா ராஜேந்திரன் பீட்டர் துரைராஜிடம் பேசியவை! ஜெயமோகனுக்கு ஆர்எஸ்எஸ் தந்திருக்கும் புராஜக்ட்தான் கம்யூனிஸ்டுகளை அவமானகரமாக விமர்சித்துக் கொண்டேயிருப்பது என்று சொல்கிறீர்கள். அவரை பொன்னீலன், கோவை ஞானி, பவா.செல்லதுரை போன்ற மார்க்சியர்களே தாங்கிப் பிடிக்கிறார்களே? ஜெயமோகன் எழுதிய பின் தொடரும் நிழலின் ...