தேர்தல் நெருக்கத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களூமே வாக்காளர்கள் மனதில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும். அது தேர்தலின் வெற்றி ,தோல்விகளுக்கு காரணமாகிவிடும்! தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்பிருந்த திமுக கூட்டணியின் இமேஜ் ,கூட்டணி கட்சிகளை அலைகழித்து பலத்த இழுபறிக்குள்ளான நிலையில் சற்று சேதாரமடைந்துள்ளதாகத் தான் தோன்றுகிறது. திமுகவானது கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சக்திக்கேற்ப தொகுதியை சற்று குறைத்து கொடுக்க முயன்றது தவறல்ல. ஆனால், அதை நடைமுறைப்படுத்திய விதம் பக்குவமற்றது. உதாரணமாக காங்கிரஸ் விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக காங்கிரஸ் சென்ற சட்டமன்ற ...