முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பார்த்துப், பேசி, பழகி வருகிறேன்! அப்பவெல்லாம் கட்டுமஸ்தானாக இருப்பார் நல்லகண்ணு! பேச்சுல கிண்டல்,கேலி, எள்ளல் தெரித்து விழும்! அச்சு அசல் கிராமத்து வெள்ளந்தி குணம் நிறைந்திருக்கும்! அப்ப இவரைவிட ,பெரிய தியாகிகள்,வயது முதிர்ந்த போராளிகள் கட்சியில் இருந்த காலம்! கே.டி.கே.தங்கமணி, முருகேசன், எம்.வி.சுந்தரம், எம்.கல்யாணசுந்தரம் ஆகியோர் உயிருடன் இருந்தனர். அப்ப கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் தான் இவரை அதிகமாக பார்க்க முடியும்! அந்த காலத்தில் ஜனசக்தி பத்திரிகையின், நிருபராக நல்லகண்ணுவும், போட்டோகிராபராக நானும் செயல்பட்ட ஒரு அனுபவத்தை ஏற்கனவே ...