இன்றைய பாஜகவில் கிட்டத்தட்டபாதிப்பேர் காங்கிரசில் இருந்து போனவர்கள்! இன்னும் சிலர் தேதி பார்த்துள்ளனர்! உ.பி.தேர்தலில் பிரச்சாரத்திற்கு காங்கிரசின் முக்கிய தலைவர்கள் போகாதது ஏன்? சித்தாந்த ரீதியாக காங்கிரஸின் நீண்டகால கொள்கையாளர்களுக்கு ஏன் முக்கிய பதவிகள் கொடுக்கப்படுவதில்லை. சமீபத்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை கணக்கில் எடுத்து பார்த்தால் விரல்விட்டு எண்ணத்தக்க ஓரிவரைத் தவிர அனைவரும் முதியோர்களாகவே இருந்தனர்! காங்கிரஸ் ஓய்வு தேடும் முதியோர் இல்லமாக காட்சியளிப்பது தெரிந்தது. பிரியங்கா காந்தி பேசும் போது, உத்திரபிரதேச தேர்தலை எதிர் கொள்வதில் பாஜக தலைவர்கள் ...
கொங்கு மண்டலத்தை பொறுத்த வரை செந்தில் பாலாஜி தான் திமுகவின் ஒற்றை முகம்! முடிசூடா மன்னன். அவர் வைத்ததே சட்டம்! இங்கே ஒட்டுமொத்த திமுகவும், ஆட்சி நிர்வாகமும் அவர் விரலசைவுக்கு கட்டுப்படும் போது, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மட்டும் மண்டியிட மறுப்பதா..? நகர்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசும் திமுகவும் கூட்டாக களம் கண்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் என்பதால் அந்தந்த மாவட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் நடந்து வருகின்றன! தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் ...
பாஜகவின் லட்சியங்களில் ஒன்று காங்கிரஸ் இல்லாத இந்தியா! ஒரு எதிர்கட்சியாகக் கூட காங்கிரஸ் உயிர்பித்து இருக்கக் கூடாது. அவ்வளவு ஏன் ஒரு பலவீனமான கட்சியாகக் கூட அது ஜீவித்திருக்கக் கூடாது என்பது தான் பாஜகவின் இலக்கு! இதை பல மேடைகளில் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சொல்லி இருக்கிறார்கள்! அதே சமயம் அந்த அழித்தொழிப்பை அவர்கள் ஜனநாயக வழியில் செய்வதற்கு செய்வதை விடவும், ஆள்தூக்கி அரசியல் வழியாக – பேர அரசியல் வழியாகத் – தான் பல்வேறு மாநிலங்களிலும் நடைமுறைப் படுத்தினார்கள். நமக்கு மிக ...
எந்த ஒரு எம்.பியானாலும், மக்கள் நலத் திட்டங்களை மாநிலஅரசின் ஒத்துழைப்புடன் தான் செய்ய முடியும்! மாநில அரசு என்றால், மாவட்ட ஆட்சியர் வழியாகத்தான் மக்களுக்கு நன்மைகளை கொண்டு சேர்க்க முடியும்! ஜோதிமணி அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படும் ஒரு சமூக செயல்பாட்டாளர்! கரூர் எம்.பி தொகுதியில் சுமார் 10,000 மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான உபகரணங்களை கேட்டு காத்துள்ளனர். இந்த நிலையில் மாநில அரசால் மட்டுமே இந்த தேவைகளை நிறைவு செய்துவிட முடியாது! ஆகவே, அவர் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் ...
தேசப்பற்றுக்கும் ,போராட்ட குணத்திற்கும் பேர் போன மாநிலம் பஞ்சாப்! தமிழக மக்களை போலவே பஞ்சாப் மக்களும் பாஜகவை இன்று வரை முற்றிலும் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்தியாவிலேயே காங்கிரஸ் வலுவாக காலூன்றி நிற்கும் மாநிலங்களில் பஞ்சாப் முதன்மையானது! அந்த பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் கட்சி கலகலக்கத் தொடங்கியுள்ளது! சென்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வெற்றியை சாத்தியப்படுத்தி முதலமைச்சர் ஆன, கேப்டன் அமீந்தர்சிங் மனம் வெதும்பி முதல்வர் பொறுப்பில் இருந்து ராஜீனாமா செய்துள்ளார். இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ...
இந்தியா ஒரு நெருக்கடியான சமூக, அரசியல் சூழலில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் தருணத்தில் அதை காப்பாற்ற வேண்டிய கடமை கொண்ட காங்கிரஸ் கட்சியோ..,தன்னைத் தானே காப்பாற்ற முடியாமல் கரைந்து கொண்டிருக்கிறது! மக்களாட்சித் தத்துவத்தை கேலிக்குரியதாக்கி, ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைத்துக் கொண்டுள்ளது பாஜக! ஜாதி,மத பாகுபாடுகளை வளர்த்து நிறுவி, மக்கள் சமூகத்தை ஆண்டான்-அடிமை, மேலோர்-கீழோர் என பிரித்து அடக்கியாள நினைக்கும் பாஜகவிடமிருந்து இனி மக்களை காப்பாற்றப் போவது யார்..? 135 ஆண்டுகால பாரம்பரியமுள்ள அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற – எல்லா மாநிலங்களிலும் காலூன்றி இருந்த ...
கேரள அரசியலில் முன் எப்போதுமில்லாத மாற்றங்கள் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன. இந்த தேர்தலில் கடவுள், சாதி, மத ரீதியிலான வாக்குகளை குறிவைத்தே எல்லா கட்சிகளின் பிரச்சாரங்களும் அமைந்தன…!இது வரை காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் என்ற இருதுருவ அரசியலில் உழன்ற கேரளா.., தற்போது மூன்று துருவ முக்கோண அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது…! மேற்குவங்கத்தில் எப்படி ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளும்,காங்கிரசாரும் கிட்டதட்ட சம பலத்தில் இருந்தனரோ…, அதே போலத் தான் கேரளாவிலும் இதுவரையிலும் இருந்தனர். ஆனால், கேரளாவில் இந்த தேர்தல் முடிவுகள் சில அதிர்ச்சிகரமான உண்மைகளை ...
தேர்தல் நெருக்கத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களூமே வாக்காளர்கள் மனதில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும். அது தேர்தலின் வெற்றி ,தோல்விகளுக்கு காரணமாகிவிடும்! தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்பிருந்த திமுக கூட்டணியின் இமேஜ் ,கூட்டணி கட்சிகளை அலைகழித்து பலத்த இழுபறிக்குள்ளான நிலையில் சற்று சேதாரமடைந்துள்ளதாகத் தான் தோன்றுகிறது. திமுகவானது கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சக்திக்கேற்ப தொகுதியை சற்று குறைத்து கொடுக்க முயன்றது தவறல்ல. ஆனால், அதை நடைமுறைப்படுத்திய விதம் பக்குவமற்றது. உதாரணமாக காங்கிரஸ் விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக காங்கிரஸ் சென்ற சட்டமன்ற ...
சரியான தலைமையை அங்கீகரிக்க மறுப்பது, தகுதியற்ற தலைமையை திணிப்பது என்ற சர்வாதிகாரத்திற்கான விலையைத் தான் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அனுபவித்துக் கொண்டிருக்கிறது புதுச்சேரியில்! கடந்த ஐந்தாண்டுகளாக புதுச்சேரி அரசியலில் கையாலாகத்தனம்,கோமாளித்தனம் ஆகியவற்றின் அம்சமாக சொந்தக் கட்சிக்காரர்களாலேயே பார்க்கப்பட்டு வருபவர் தான் நாராயணசாமி! புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கோ, புதுச்சேரி மக்கள் நலனுக்கோ எந்த விதத்திலும் பாடுபட்டு அரசியலில் உயர்ந்தவரல்ல நாராயணசாமி! புதுச்சேரி தலைவர்களில் ஒருவரான ப.சண்முகத்தின் நம்பிக்கையைப் பெற்று, அவருக்கு பின்பு டெல்லி அரசியல் தலைமையின் அணுக்கத்திற்கு உரியவராக மாற்றியவர் தான் நாராயணசாமி! ...
மென்மையான மனிதர்,ஆனால் உறுதியான உள்ளம்! ஐஏஎஸ் என்ற பெரிய பதவியை வகித்தவர் என்ற பந்தா சிறிதுமில்லாத நட்பான அணுகுமுறை, ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதி, சமரசமற்ற நேர்மை…ஆகியவற்றை ஒருங்கே கொண்டவர் சசிகாந்த் செந்தில். தான் வகித்த ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாடெங்கும் சுற்றி பாஜகவிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் தலையகமான சத்தியமூர்த்திபவனில், அறம் இணைய இதழுக்காக நமது நிருபர் செழியன்.ஜா.விற்கு அவர் தந்த நேர்காணல். ஐ.ஏ.எஸ் என்ற பெரிய பதவியில் மக்களுக்கு எவ்வளவோ ...