ஊசலாடிய குஷ்பு, உறுதிப்படுத்தினார் காங்கிரஸை! அந்த மட்டுக்கு தற்போதைய சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளியை பலமாக வைத்துவிட்டார். குஷ்பு நல்ல பிரச்சாரகர்,சிறந்த புத்திசாலி,அரசியல் அறிவுமுள்ளவர்! ஆனால், சந்தர்ப்பவாத குணமுள்ளவர் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். கடந்த சில மாதங்களாக அவர் பாஜகவில் சேர்வதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததை யடுத்து, அவருக்கு காங்கிரசில் தனக்கான இடத்தை உறுதி செய்வதற்காக கட்டாயம் ஏற்பட்டு விட்டது.  அதை நேற்றைய வடசென்னை ஆர்ப்பாட்டத்தில் சிறப்பாகவே செய்துவிட்டார். அதே சமயம் கடந்த சில மாதங்களாக அவர் பாஜகவில் சேர்வதற்கு எடுத்த பிரயத்தனங்கள் தெரிய வந்தவர்களுக்கு குஷ்புவின் நேற்றைய பேச்சுகள் குழப்பமாகவோ,அதிர்ச்சியாகவோ கூட இருக்கலாம்!  ஆனால்,அவரது ...

உலக பொருளாதார அறிஞர்களில் முக்கியமானவரும்,இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,காங்கிரசின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் தனது 88வது பிறந்த நாளை மிக அமைதியாக எதிர்கொண்டார்! இந்த நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலராக இருப்பவர் கூட தன் பிறந்த நாளில் போஸ்டர்கள், பேனர்கள்,விழாக்கள் என ஆர்ப்பாட்டமாக எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம். மன்மோகன் சிங் எளிமையானவராக இருப்பதால் ஊடகங்களும் அவரது பிறந்த நாளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை! ஆனால்,அவர் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய,பின்பற்ற வேண்டிய ஒரு அற்புதமான முன்னோடி என நான் கருதுகிறேன்! அவரது பிறந்த நாளன்று பிரதமர் மோடி ஒரு சம்பிரதாய வாழ்த்தை டிவிட்டரில் தெரிவித்தார்! சிதம்பரமோ, ’’மன்மோகன் சிங்கிற்கு பாரதரத்னா விருது தந்து ...