அதிர்ஷ்டவசமாக முதல்வரானது, ஜெயலலிதா இல்லாமலே நான்காண்டு ஆட்சியை நடத்த முடிந்தது, பெரிய பிளவுகளின்றி கட்சியை கொண்டு சென்றது, அடுத்த முதலமைச்சராகவும் தன்னை அறிவித்துக் கொண்டு களம் காண்பது… எல்லாம் சரி தான்! ஆனால், தன் சொந்த தொகுதியான எடப்பாடியில் வெற்றி பெறுவது எளிதாக தெரியவில்லையே! எங்கெங்கிலும் எடப்பாடி பழனிச்சாமியின் மீதான எரிச்சல் தெரிகிறதே..! பல்லாயிரக்கணக்கில் கோடிகளை இறைக்கலாம், ஆட்சி பலம் உதவலாம்,அடியாட்கள் படையை இறக்கலாம்..ஆனால், விரக்தியடைந்திருக்கும் மக்கள், வாழ்வாதாரம் தொலைத்த மக்கள், அனுபவ ரீதியாக எடப்பாடி பழனிச்சாமியை அளந்து வைத்திருக்கும் மக்களை வெறும் பணபலத்தாலோ, ...