அந்தகார இருள் படிந்திருக்கும் சமூகத்தில் அறத்தின் ஒளியை பாய்ச்சியவாறு ஆறாம் மாதத்தில் காலடி எடுத்து வைக்கிறது நம் அறம் இணைய இதழ்! அறிவில் சிறந்த ஆன்றோர்களும், கல்வியில் சிறந்த சான்றோர்களும் நடக்கும் அநீதிகளை எதிர்த்து தட்டிக் கேட்டால் தான் ஒரு சமூகத்தில் அறம் தழைக்கும்! அப்படி நடக்காவிட்டால் நாமும் அமைதியாய் இருந்துவிட்டு போவோமே என்பதில் எனக்கு உடன்பாடில்லை! பொது நலனுக்கு குரல் கொடுக்க, பணியாற்ற, நேர்மையான யாருக்கும் உரிமையுண்டு! சில நேரங்களில் இதில் சந்திக்க நேரும் அவமானங்களும்,ஆபத்துகளும் அயர்ச்சியை ஏற்படுத்தினாலும், அறச் சீற்றங்களை அழுத்தி ...