புதிய மின்சார சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் நோக்கமே லாபத்தை தனியாருக்கும், நஷ்டத்தை மாநில அரசுகளுக்கும் பரிசளிக்கவும் தான்! இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மின் கட்டணங்கள் தாறுமாறாக உயரும். எளிய, நடுத்தர பிரிவு மக்களுக்கு மின்சாரம் எட்டாக் கனியாகும். அதானியின் சொத்து மதிப்பு இரட்டிப்பாகும்! ஏனென்றால், இந்தியாவிலேயே மிக அதிக தனியார் அனல் மின் நிலையங்கள் வைத்திருப்பது அதானி குழுமமே! மகாராஷ்டிரா, குஜராத், சத்திஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான்.., என பல மா நிலங்களில் அதானியின் நிறுவனங்கள் 12,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து ...