மத்திய அரசுக்கு சித்தமருத்துவ ஆய்வுகள் என்றாலே எட்டிக் காயாகக் கசக்கிறது! அதே சமயம் பல வருட ஆராய்ச்சியில் நடைமுறை ரீதியாக நாம் நிருபித்த சித்த மருத்துவக் கண்டுபிடிப்புகளை ஆயூர்வேத கண்டுபிடிப்பாக மனசாட்சியின்றி மடைமாற்றம் செய்வது இனிக்கிறதோ…? புற்றுநோய் குறித்து சித்த மருத்துவத்தில் பல குறிப்புகள், மற்றும் பெரும் மருந்துகள் உள்ளன. சென்னையில் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஜட்ஜ் பலராமையா போன்ற புகழ் பெற்ற சித்த மருத்துவர்கள் புற்று நோய்க்கு வெற்றிகரமாக சிறப்பு மருந்துகளை கொடுத்து பலரை காப்பாற்றி உள்ளனர். இது குறித்து அவர் எழுதிய ...